இன்றும் ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்க போராட்டம்!!
சுகயீன விடுமுறையை அறிவித்து இன்று (27) நாடளாவிய ரீதியில் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடுவதற்கு ஆசிரியர் – அதிபர் சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
கொழும்பில் இடம்பெற்ற போராட்டத்தின் மீது பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங்கள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று (26) ஆசிரியர் – அதிபர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்து பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டதுடன், இதன் காரணமாக நாடளாவிய ரீதியில் பல பாடசாலைகளில் கற்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பல பாடசாலைகளில் மாணவர்களின் வருகை மிகவும் குறைவாக காணப்படுவதாகவும், பாடசாலைகளுக்கு வந்த சில மாணவர்கள் பாடசாலைகளுக்குள் நுழைய முடியாமல் திரும்பிச் செல்லும் நிலை ஏற்பட்டதாகவும் “அத தெரண” செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
No comments