கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் இலட்சக்கணக்கில் பாதிப்புக்குள்ளான மாணவர்கள்
41 நாட்களாகத் தொடரும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் போராட்டம் காரணமாக 17 அரச பல்கலைக்கழகங்கள் மற்றும் 17 உயர்கல்வி நிறுவனங்களின் செயற்பாடுகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, நாட்டின் பல்கலைக்கழக கட்டமைப்பில் உள்ளக மற்றும் வெளிவாரியாக கல்வி கற்கும் சுமார் இரண்டு இலட்சம் மாணவர்கள் நெருக்கடியை எதிர்நோக்கியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில், இந்த பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக கற்றல் நடவடிக்கைகள் மற்றும் பரீட்சைகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தங்களின் கோரிக்கைகளுக்கு அரசாங்கம் உரியத் தீர்வை முன்வைக்கும் வரை இந்தப் போராட்டம் தொடரும் என்றும் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments