Vettri

Breaking News

அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது ஆப்கானிஸ்தான்!!




 இருபதுக்கு 20 ஓவர் உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 21 ஓட்டங்களால் வெற்றிப்பெற்றுள்ளது.

Kingstownயில் இடம்பெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுக்களை இழந்து 148 ஓட்டங்களை பெற்றது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Rahmanullah Gurbaz 60 ஓட்டங்களையும், Ibrahim Zadran 51 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்து வீச்சில் அவுஸ்திரேலிய அணியின் வேகப்பந்து வீச்சாளர் பெட் கம்மின்ஸ் மூன்று விக்கெட்டுகளை (ஹட்ரிக்) கைப்பற்றினார்.

இந்நிலையில் வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 19.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 127 ஓட்டங்களை பெற்று தோல்வியடைந்தது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Glenn Maxwell 59 ஓட்டங்களை பெற்றார்.

பந்து வீச்சில் ஆப்கானிஸ்தான் அணி சார்பில் Gulbadin Naib 04 விக்கெட்டுக்களையும், Naveen-ul-Haq 03 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

No comments