Vettri

Breaking News

நிவாரண சேவைகளை வழங்குவதற்காக இராணுவத்தினர் கடமையில்!!




 நாடளாவிய ரீதியில் நிலவும் சீரற்ற காலநிலையினால் ஆறுகளை அண்டிய தாழ்நிலப்பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்டு அவர்களுக்கான நிவாரண சேவைகளை வழங்குவதற்காக இராணுவத்தினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு மற்றும் இராணுவத் தளபதியின் பணிப்புரைக்கு அமைய அவர்கள் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

கிரிசயல்ல - அயகம பகுதியில் இராணுவக் குழுவொன்று படகுடன் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

தெஹியோவிட்ட - தல்துவ பகுதியிலும், கலதுரு ஓயா - கிரியெல்ல பகுதியிலும், மொரவக, தவலம, திஹகொட மற்றும் நெலுவ பகுதிகளிலும் இராணுவக் குழுக்கள் படகுகளுடன் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

 பாதிக்கப்பட்ட மக்களை மீட்பதற்காகவும் அவசரநிலை ஏற்பட்டால் இராணுவத்தினரை தயார் நிலையில் வைத்திருக்குமாறும் பாதுகாப்பு படை தலைமையக தளபதிகளுக்கு இராணுவத் தளபதி பணிப்புரை விடுத்துள்ளார். 


No comments