மோட்டார் சைக்கிள் கற்று தருவதாக கூறி மாணவியுடன் பாலியல் சேட்டை!!
பாடசாலை மாணவிக்கு மோட்டார் சைக்கிள் ஓட கற்றுதருவதாக கூறி பாலியல் சேட்டை புரிந்த 44 வயதான, முச்சக்கர வண்டி சாரதி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணத்தை சேர்ந்த மாணவி ஒருவரை அவரது கல்வி நடவடிக்கைக்காக ஏற்றி இறக்கும் சேவைக்காக முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை மாணவியின் பெற்றோர் வாடகைக்கு அமர்த்தி இருந்தனர்.அந்நிலையில் நேற்று (24) தனது முச்சக்கர வண்டி திடீரென பழுதடைந்து விட்டதாகவும் , அதனால் தனது மோட்டார் சைக்கிளில் மாணவியை ஏற்றி செல்வதாக கூறி மாணவியை மோட்டார் சைக்கிளில் ஏற்றி சென்றுள்ளார்.
இடையில் , மாணவிக்கு மோட்டார் சைக்கிள் கற்று தருவதாக கூறி, தான் மோட்டார் சைக்கிளின் பின் இருக்கையில் அமர்ந்து , மாணவியை முன் இருக்கையில் அமர்த்தி மோட்டார் சைக்கிள் ஓட கற்று கொடுக்கும் சாட்டில் , மாணவியுடன் பாலியல் ரீதியான சேட்டை புரிந்துள்ளார்.
வீடு திரும்பிய மாணவி அது தொடர்பில் பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து , பெற்றோரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தின் சிறுவர், பெண்கள் பிரிவில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டதை அடுத்து , முச்சக்கர வண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சாரதியை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
No comments