திருக்கோவிலில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தியாகிகள் தினம்!!
ஈழ மக்கள் மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா மற்றும் 13 போராளிகள் உயிர்த்தியாகம் செய்த தினத்தை நினைவு கூறும் 34 வது தியாகிகள் தின நிகழ்வானது செல்லையா இராசையா ( முன்னாள் தவிசாளர், EPRLF ன் கிழக்கு மாகாண ஸ்தாபக சிரேஷ்ட உறுப்பினர் ) அவர்களின் தலைமையில் இன்று புதன்கிழமை (19/06/2024) பிற்பகல் 4.00 மணியளவில் திருக்கோவில் வெஸ்லி கிறிஸ்தவ தேவாலய அரங்கில் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு s. நேசராசா (விவேகானந்தா விளையாட்டு கழகத்தின் முன்னாள் தலைவர்), கமலநாதன் ( முன்னாள் திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் ) வரதராஜன், மற்றும் EPRLF ன் கட்சியின் உறுப்பினர்கள், கட்சி ஆதரவாளர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந் நிகழ்வில் மங்கள விளக்கேற்றல், செயலாளர் நாயகம் பத்மநாபாவின் திருவுருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தி உயிர்த்தியாகம் செய்தவர்களுக்கு இரண்டு நிமிட மௌன அஞ்சலி, ERLF ன் உறுப்பினர்களின் உரைகளும் இடம் பெற்றது.
No comments