Vettri

Breaking News

அபிவிருத்தி பணிகளை நேரில் ஆராய்ந்தார் ஜனாதிபதி!!




 ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று பிற்பகல் கந்தானை சென். செபஸ்தியன் தேவாலயத்திற்குச் சென்று அதன் அபிவிருத்தி பணிகள் குறித்த நேரில் ஆராய்ந்தார்.

கந்தானை சென். செபஸ்தியன் தேவாலயம் பெருமளவான கிறிஸ்தவ மக்கள் வரும் தளமாக காணப்படுவதோடு, இதன் திருவிழா காலத்திலும் நாடளாவிய ரீதியிலிருந்து லட்சக்கணக்கிலான மக்கள் வருகை தருவர்.

தேவாலயத்தின் சுற்று வட்டாரத்தில் நிறையும் தண்ணீரை அருகிலுள்ள வயலுக்கு அனுப்புவதற்கான திட்டம் குறித்த கோரிக்கைகள் நீண்ட நாள்களாக முன்வைக்கப்பட்டு வருகின்ற நிலையில், அதற்காக 6 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

அதன் முதற்கட்ட ஏற்பாடுகளை ஆரம்பிப்பதற்காக 02 லட்சம் ரூபா காசோளையினை ஜனாதிபதி தேவாலயத்தின் தலைமைப் பாதிரியார் லலித் எக்ஸ்பெடிடஸிடம் வழங்கி வைத்தார்

No comments