Vettri

Breaking News

தாமரை பூ பறிக்கச் சென்ற 9 சிறுவனுக்கு நடந்த துயரம்!!




 

மொனராகலை - எத்திமலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரஅத்துபிட்டிய வாவியில் தாமரை பூ பறிக்கச் சென்ற பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

எத்திமலை பகுதியைச் சேர்ந்த 9 வயதுடைய சிறுவனே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த மாணவன் பாடசாலை நிறைவடைந்த நிலையில், தனது மூன்று நண்பர்களுடன் இணைந்து தாமரை பூ பறிப்பதற்காக வாவிக்கு சென்றுள்ளார்.

இதன்போது இந்த மாணவன் வாவிக்கு அருகில் இருந்த கிணற்றில் தவறி வீழ்ந்து நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

இந்நிலையில், மாணவன் நீண்ட நேரமாகியும் பாடசாலையில் இருந்து வீடு திரும்பாததால்  மாணவனின் பெற்றோர் மாணவனைத் தேடிச் சென்றுள்ளனர்.

இதன்போது, அயல் வீட்டில் வசிப்பவர்கள் இந்த மாணவன் சக மாணவர்களுடன் இணைந்து தொரஅத்துபிட்டிய வாவியை நோக்கிச் சென்றதாகத் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, இந்த மாணவனின் பெற்றோர் வாவிக்குச் சென்று தேடிப் பார்த்த போது மாணவன் அங்குள்ள கிணற்றில் வீழ்ந்திருப்பதைக் கண்டுள்ளனர்.

இதனையடுத்து, மாணவன் எத்திமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், 

மாணவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

No comments