Vettri

Breaking News

ஆமணக்கு விதையை சாப்பிட்ட 8மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதி!!




 ஒவ்வாமை காரணமாக 8 பாடசாலை மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஆமணக்கு விதையை சாப்பிட்டதால் ஏற்பட்ட  ஒவ்வாமை காரணமாகவே குறித்த மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தட்சணாமருதமடு பகுதியில் நேற்று  பிற்பகல் இக்குழந்தைகள் ஆமணக்கு விதையை சாப்பிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறிப்பாக 9 வயதுடைய ஆண் குழந்தையொன்றும் 7 பெண் குழந்தைகளும் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

மேலும் இவர்கள் மடு பகுதியைச் சேர்ந்த சிறுவர்கள் என்பதுடன் மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments