Vettri

Breaking News

இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு!!




 இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட காலப்பகுதியில் 44,430 வாகனங்கள் சந்தைக்கு கொண்டுவரப்பட்டதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

உள்ளூர் வாகன உற்பத்தியாளர்கள் குழுவுடன் நிதியமைச்சில் நேற்று (06) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அவற்றில் 38,144 மோட்டார் சைக்கிள்கள் மற்றும் 6,286 கார்கள் உள்ளடங்குவதாக நிதி இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இதன்போது வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

No comments