30ம் திகதி திறக்கப்படுகிறது காட்டுப்பாதை: கிழக்கு ஆளுனரும் பங்கேற்பு!!
கதிர்காமத்துக்கான காட்டுப்பாதையை எதிர்வரும் 30ஆம் திகதி கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து வைக்கவுள்ளதாக, அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக அபேவிக்ரம தெரிவித்தார்.
அம்பாறை மாவட்ட செயலகத்தில் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் மாவட்டச் செயலாளரை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின் போதே, அவர் இதனைத் தெரிவித்தனர்.
இந்த சந்திப்பில் ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத் தலைவர் மு.வடிவேல், செயலாளர் செல்வானந்தன், பொருளாளர் இ.ஜெகநாதன் உள்ளிட்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
இதன்போது பத்து நாட்களுக்கு முன்னராக அதாவது 25ஆம் திகதி காட்டுப்பாதையை திறக்குமாறு ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் கோரிக்கை விடுத்தனர்.
இதற்கு பதிலளித்த அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், கதிர்காமத்துக்கான காட்டுப்பாதை 30ஆம் திகதி திறக்கப்படவுள்ளதுடன், அப்பாதையை கிழக்கு மாகாண ஆளுநர் திறந்து வைக்கவுள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் சிவ.ஜெகராஜனையும் ஆலையடிவேம்பு பிரதேச அனைத்து இந்து ஆலயங்களின் ஒன்றியத்தினர் சந்தித்து கலந்துரையாடினர்.
காரைதீவு குறூப் நிருபர்
No comments