சட்டவிரோதமாக இந்தியாவிற்குச் சென்ற 2 இலங்கையர்கள் கைது!!
சட்டவிரோதமாக படகு மூலம் இந்தியாவிற்குச் சென்ற 2 இலங்கையர்களை அந்த நாட்டு கரையோர பொலிஸார் கைது செய்துள்ளனர்.
மண்டபம் பகுதிக்கு அருகில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி பகுதியைச் சேர்ந்த 23 மற்றும் 32 வயதுகளையுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த இருவரிடமும் இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தி ஹிந்து செய்தி வெளியிட்டுள்ளது.
அதேநேரம் அவர்கள் பயணித்த படகையும் பாதுகாப்புத் தரப்பினர் கைப்பற்றியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
No comments