Vettri

Breaking News

27 வயதில் கலாநிதி பட்டத்தையும் பூர்த்தி செய்யும் வகையில், மாணவர்கள் கல்வி உரிமையை உறுதி செய்வதாக, கல்வி அமைச்சர் தெரிவிப்பு!!




 நவீன உலகத்துக்கு ஏற்ற வகையில், 21 வயதில் முதல் பட்டப்படிப்பையும், 23 வயதில் பட்ட பின்படிப்பையும், 27 வயதில் கலாநிதி பட்டத்தையும் பூர்த்தி செய்யும் வகையில், மாணவர்கள் கல்வி உரிமையை உறுதி செய்வதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார்.

கொழும்பு நாலந்தா வித்தியாலயத்தில் நேற்று நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையில் சித்தியடைந்த பிள்ளைகளுக்கான உயர்தரக் கற்கைகளை ஆரம்பிக்கும் நிகழ்வில், பிரதம அதிதியாகக் கலந்துகொண்ட அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இங்கு உரையாற்றிய அமைச்சர்: ஜூலை மாத இறுதியில், சகல பாடப்பிரிவுகளும் கொண்ட சகல பாடசாலைகளும் இணைக்கப்பட்டு, தகவல் தொழில் நுட்பம் வலையம் அமைக்கப்பட்டு டிஜிட்டல் மயமாக்கப்படும். தொழிற்சங்க நடவடிக்கைகளால் ஆசிரியர்கள் சுகயீனமுற்றாலும், குழந்தைகள் சுகயீனம் அடைய மாட்டார்கள்.

கல்விப் பொதுத் தரப்பரீட்சை முடிவடைந்தவுடன் உயர்தர வகுப்புக்களை ஆரம்பிக்கும் சவாலான பணியை ஆரம்பித்துள்ளோம். பரீட்சை முடிவுகள் காலதாமதமாவதால், கல்வியை இழக்கும் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மாணவர்களுக்காகவே இத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

No comments