Vettri

Breaking News

25,000 ரூபாவை லஞ்சமாக பெற்ற அதிகாரி கைது!!




 பெண் ஒருவரிடம் 25,000 ரூபாவை லஞ்சமாக பெற்ற சம்பவம் தொடர்பில் ஹீரஸ்ஸகல கிராம அதிகாரியை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு நேற்று (26) கைது செய்துள்ளது.

ஹீரஸ்ஸகல கிராம சேவை பிரிவில்  வசிக்கும் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு ஹிரஸ்ஸகல பிரதேசத்திற்குச் சென்று குறித்த கிராம உத்தியோகத்தர் அலுவலக வளாகத்தில் பணம் கொடுத்த போது அவரை கைது செய்துள்ளனர்.

முறைப்பாடு செய்த பெண்ணின் மகனின் வீட்டிற்கு மின்சாரம் வழங்கிய சம்பவம் தொடர்பில் கிராம அதிகாரி இந்தப் பணத்தை எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது

No comments