தேசிய பாடசாலைகளுக்கு புதிதாக 2500 ஆசிரியர்கள்!!
மாகாண மட்டத்தில் நிலவும் ஆசிரிய வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கான துரித நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டுள்ளதாக கல்வியமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
இதன் முதற்கட்டமாக எதிர்வரும் ஜூலை 3ஆம் திகதி தேசிய பாடசாலைகளுக்கு புதிய ஆசிரியர்களை நியமிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் அன்றைய தினம் 2500 ஆசிரியர் களுக்கு புதிதாக நியமனக் கடிதங்களை வழங்குவதற்கு தயாராகி வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் மேற்கொண்ட பேச்சு வார்த்தையின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ள போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அதற்கிணங்க ஆங்கில மொழி ஆசிரியர்களுக்கான தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் ஓய்வு பெற்று சென்றுள்ள ஆங்கில மொழி ஆசிரியர்களை ஒப்பந்த அடிப்படையில் இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் கல்வி நிர்வாக சேவை மற்றும் ஆசிரிய கல்வி சேவை அதிகாரிகளின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்வதற்காக, துரித வேலைத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் கல்வியமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
No comments