Vettri

Breaking News

22 கிலோகிராம் கேரள கஞ்சா பறிமுதல்!




 யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் 22 கிலோகிராம் கேரள கஞ்சா பொலிஸாரினால் இன்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண பிராந்திய விசேட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் குறித்த கஞ்சா கைப்பற்றப்பட்டது.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் குருநகர் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பின் போது 10 பொதிகளில் 22 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது.

கைப்பற்ற கஞ்சாவை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ள பொலிஸார், சந்தேக நபரை கைது செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.


No comments