Vettri

Breaking News

2024 T20 உலகக் கிண்ணத்திற்கான சாதனை பரிசுத் தொகையை வெளியிட்டதது ICC!!




 2024 T20 ஆடவர் உலகக்கிண்ணக் கிரிக்கெட் தொடருக்கான  பரிசுத் தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்துள்ளது.

அதன்படி, போட்டித் தொடருக்காக 11.25 மில்லியன் அமெரிக்க டொலர் பரிசுத் தொகையை ICC அறிவித்துள்ளது, மேலும், போட்டித் தொடரில் வெற்றிப் பெற்று கிண்ணத்தை சுவீகரிக்கும் அணிக்கு 2.45 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய,, T20 உலக்கிண்ணத் தொடர் வரலாற்றில் அதிகப்பட்சமான பரிசுத் தொகை இவ்வருடம் வழங்கப்படவுள்ளதாக ஐசிசி அறிவித்துள்ளது. 

இதேவேளை, போட்டித் தொடரின் இரண்டாம் இடத்தை பெறும் அணிக்கு 1.28 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பணப்பரிசாக வழங்கப்படவுள்ளது.

அதே நேரத்தில் அரையிறுதியில் தோல்வியடையும் இரு அணிகளுக்கும் தலா  787,500 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதேவேளை, சூப்பர் 8 சுற்றில் அரையிறுதிக்கு முன்னேறாத அணிகளுக்கு தலா 382,500 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படவுள்ள நிலையில் 9 மற்றும் 12 ஆவது இடங்களுக்கு  இடையிலான அணிகளுக்கு 247,500 அமெரிக்க டொலர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

 அதேபோல், 13வது முதல் 20வது இடம் வரை உள்ள அணிகள் ஒவ்வொன்றுக்கும் 225,000 அமெரிக்க டொலர்கள் பரிசுத் தொகையாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக, ஒவ்வொரு அணியும் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளைத் தவிர்த்து, வெற்றிப் பெறும் ஒவ்வொரு போட்டிக்கும் 31,154 அமெரிக்க டொலர்களை மேலதிகமாக பெறவுள்ளன


.

No comments