மட்டக்களப்பில் 192 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரம்!
மட்டக்களப்பு மாவட்டத்தின் 13 பிராந்திய செயலகப் பிரிவுகளில் தகுதி பெற்ற 27,595 குடும்பங்களில் 192 குடும்பங்களுக்கு காணி உறுதி பத்திரங்களை ஜனாதிபதி வழங்கி வைத்தார்.
நாட்டில் 20 இலட்சம் பேருக்கு காணி உறுதிகளை வழங்குவதற்கான “உறுமய” தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் 192 குடும்பங்களுக்கு இவ்வாறு காணி உறுதி பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
No comments