19 நாட்களில் 69,825 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை!!
இலங்கைக்கான வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளின் வருகை, முதல் அரையாண்டு காலப்பகுதியில் ஒரு மில்லியனை கடக்கும் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை வெளியிட்டுள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதத்தின் முதல் 19 நாட்களில் 69,825 வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
இதற்கமைய இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 966,825 சுற்றுலாப் பயணிகள் இலங்கையை வந்தடைந்துள்ளனர்.
No comments