15 வயதுடைய மாணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைதான மற்றைய மாணவனுக்கு தொடர்ந்து விளக்கமறியல்!!
15 வயதுடைய மாணவனைக் கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 17 வயதுடைய மாணவர் ஒருவர் எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் குறித்த மாணவனை ஏனைய கைதிகளிடமிருந்து தனிமைப்படுத்தி அங்குனகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் வைக்குமாறு ஹம்பாந்தோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ஹம்பாந்தோட்டை - சிப்பிக்குளம் பகுதியில் உள்ள பயிற்சி வகுப்பு ஒன்றிற்கு அருகில் 17 வயதுடைய மாணவர் ஒருவர் நடத்திய தாக்குதலில் 15 வயது மாணவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இரு மாணவர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறே இந்த மோதலுக்கான காரணம் எனவும் குறிப்பிடப்படுகின்றது
No comments