Vettri

Breaking News

குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன் ரூ.1,400 கோடி முதலீடு!!




இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன், கர்நாடகத்தில் உள்ள குளிர்பானங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் முதலீடு செய்யவுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் முத்தையா முரளிதரன், கர்நாடகத்தின் சாமராஜநகரா மாவட்டத்தில் உள்ள படனகுப்பேயில் குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள் தயாரிக்கும் நிறுவனத்தில் ரூ.1,400 கோடி முதலீடு செய்யவுள்ளதாக கர்நாடக தொழில்துறை அமைச்சரும், எம்பியுமான பாட்டீல் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். 

இந்தத் திட்டம் பற்றி அமைச்சர் பாட்டீலுடன் முத்தையா முரளிதரனுடன் கலந்துரையாடினார். இதுகுறித்து அமைச்சரின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “இலங்கையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முரளிதரன், “முத்தையா குளிர்பானங்கள் மற்றும் தின்பண்டங்கள்” (Muttiah Beverages and Confectioneries) என்ற வர்த்தக நாமத்தின் கீழ் பானங்கள் மற்றும் தின்பண்டங்களை தயாரிக்கும் நிறுவனம் அமைக்க திட்டமிட்டுள்ளதாகவும், முதலில் ரூ.230 கோடி முதலீட்டில் திட்டமிடப்பட்ட இந்தத் திட்டம், தற்போது மொத்தம் ரூ.1,000 கோடியாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் ரூ.1,400 கோடியாக அது உயர்த்தப்படும். இந்தத் திட்டத்திற்காக ஏற்கனவே 46 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், உற்பத்தி நடவடிக்கைகள் 2025ஆம் ஆண்டு ஜனவரியில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும்” அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், முத்தையா முரளிதரன் எதிர்வரும் காலங்களில் தார்வாட்டில் மற்றொரு பிரிவையும் நிறுவத் திட்டமிட்டுள்ளதாக பாட்டீல் தெரிவித்தார்.

No comments