12ஆவது குழந்தைக்கு தந்தையானார் உலகின் முன்னணி கோடீஸ்வரர் எலான் மஸ்க்!!
உலகின் முன்னணி கோடீஸ்வரர்களில் ஒருவரான எலான் மஸ்க் (வயது 52), 12ஆவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டெஸ்லா, ஸ்பேஸ், எக்ஸ் உட்பட பல நிறுவனங்களின் தலைவரான எலான் மஸ்க் (Elon musk) இன்று 12வது குழந்தையின் தந்தை ஆகியுள்ளார்.
ஆனால் என்ன குழந்தை பிறந்தது அதன் பெயர் தொடர்பான விபரம் எதுவும் வெளியாகவில்லை.
ஏற்கனவே, எலான் மஸ்க் – ஷிவோன் சில்லீஸ் இணைந்து இரட்டைக் குழந்தைகளைக் கடந்த 2021-ல் பெற்றெடுத்தது குறிப்பிடத்தக்கது.
எலான் மஸ்க், தன் முதல் மனைவியான எழுத்தாளர் ஜஸ்டின் மஸ்க்குடன் 6 குழந்தைகளும் (அதில் ஒரு குழந்தை இறந்துவிட்டது), பாடகி கிரைம்ஸுடன் 3 குழந்தைகளும், ஷிவோன் சில்லீஸுடன் மூன்று குழந்தைகளுமாக மொத்தம் 11 குழந்தைகளுக்குத் தந்தையாவார். இந்நிலையில் தற்போது 12ஆவது குழந்தை பிறந்துள்ளது.
ஐக்யூ அதிகம் உள்ளவர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்றும் உலக மக்கள் தொகை நாளுக்கு நாள் குறைந்து வருகிறது என்று கூறி உள்ள மஸ்க் தற்போது 12ஆவது குழந்தைக்கு தந்தையாகி உள்ளார்.
இதையடுத்து அவருக்கு உலகின் முன்னணி தொழில் அதிபர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்
No comments