Vettri

Breaking News

மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரிப்பு : தக்காளி 1000ரூபாயை கடந்தது!!




 மழையுடனான காலநிலை காரணமாகக் கடந்த சில நாட்களாக மரக்கறிகளின் விலை சடுதியாக அதிகரித்துள்ளது.

ஒரு கிலோகிராம் தக்காளியின் விலை 900 முதல் 1,000 ரூபாயாக அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

முருங்கைக்காய் ஒரு கிலோகிராம் விலை 1,100 ஆகவும், கிழங்கு ஒரு கிலோகிராம் 900 – 1,000 ரூபாவாகவும் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஒரு கிலோகிராம் கறிமிளகாயின் சில்லறை விலை 900 ரூபாயாகவும் போஞ்சியின் விலை 800 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.


No comments