பல்கலைக்கழக அனுமதி இன்று முதல் விண்ணப்பம்!1
2023 – 2024 ஆம் கல்வி ஆண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கு ஒன்லைன் மூலம் விண்ணப்பம் கோரல் இன்று முதல் (14 ) ஆரம்பமாவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அந்த வகையில் இன்றைய தினம் காலை 6.00மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும். பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இதுபற்றித் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் விண்ணப்பம் கோரலுக்கான இறுதித் திகதி எதிர்வரும் ஜூலை 05ஆம் திகதியாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
No comments