07 அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறைப்பு!!
லங்கா ச.தொ.ச நிறுவனம் 07 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.
உருளைக்கிழங்கு, மா, வெள்ளை கௌபி, சிவப்பு கௌபி, செத்தல் மிளகாய், நெத்தலி, வட்டானா பருப்பு ஆகியவற்றின் விலைகளையே குறைத்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
வர்த்தக, உணவு பாதுகாப்பு அமைச்சின் ஆலோசனைக்கமைவாக இவ்விலை குறைப்பு நேற்று (06) வியாழக்கிழமை முதல் அமுலுக்கு வந்துள்ளதாக லங்கா சதொச நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.100 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வெள்ளை கௌபி 110 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை 990 ரூபாவாகும்.
425 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ உள்ளூர் உருளைக்கிழங்கு 75 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.இதன்பிரகாரம், இதன் புதிய விலை 350 ரூபாவாகியுள்ளது.
995 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சிவப்பு கௌபி, 45 ரூபாவால் குறைக்கப்பட்டு, புதிய விலை 950 ரூபாவாகக் குறைந்துள்ளது.
800 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ செத்தல் மிளகாய் 20 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூபா 780.
950 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ நெத்திலி (தாய்) 20 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூபா 930.
200 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ வட்டானா 15 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூபா 185.
195 ரூபாவுக்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மா 05 ரூபாவினால் விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன் புதிய விலை ரூபா 190 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
No comments