பரீட்சை எழுதிவிட்டு வீடு திரும்பிய மாணவிக்கு நேர்ந்த கதி
பரீட்சை எழுதியப் பின்னர் மீண்டும் வீடு திரும்பிய மாணவி ஒருவர் பேருந்தில் இருந்து தவறி விழுந்து காயமடைந்துள்ளதாக லுணுகலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த மாணவி லுணுகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பிபிலை பேருந்துசாலைக்கு சொந்தமான பேருந்தில் இருந்தே அந்த மாணவி தவறி விழுந்துள்ளார்.
இதனையடுத்து குறித்த பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
No comments