அனைத்து மதுபானசாலைகளும் மூடப்படும்!!
எதிர்காலத்தில் அமையவுள்ள ஐக்கிய மக்கள் சக்தி (SJB) அரசாங்கம் அனைத்து மதுபானசாலைகள் மற்றும் மதுபானக் கடைகளை மூடும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (16) தெரிவித்துள்ளார்.
சுற்றுலாத்துறையைப் பொறுத்தமட்டில் மட்டும் விதிவிலக்குகள் வழங்கப்படும்" என்று பிரேமதாச பொதுக் கூட்டத்தில் தெரிவித்தார்.
"நாங்கள் பாடசாலை மட்டத்திலிருந்தே ஒரு தற்காலிக இயக்கத்தைத் தொடங்குவோம். இந்த நாட்டின் குழந்தைகளைக் காப்பாற்ற இது செய்யப்படும். இதைச் சொன்னதற்காக நான் வாக்குகளை இழக்க நேரிடும் என்று எனக்குத் தெரியும், ஆனால் இது குழந்தைகளுக்காக செய்யப்படும்" என்று அவர் கூறினார்.
மேலும், நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தற்போது வழங்கப்பட்டுள்ள அனைத்து மதுபான உரிமங்களும் ரத்து செய்யப்படும் என்றும் பிரேமதாச கூறினார்.
No comments