Vettri

Breaking News

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்!




 எதிர்வரும் வாரம் ஆரம்பமாகவுள்ள 2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு (G.C.E Ordinary Level Examination) தோற்றவுள்ள மாணவர்களுக்கான அறிவிப்பொன்றை ஆட்பதிவுத் திணைக்களம் (Department for Registration of Persons) வெளியிட்டுள்ளது.

அதன்படி, பரீட்சைக்குத் தோற்றவுள்ள மாணவர்களுக்காக ஆட்பதிவுத் திணைக்களத்தினால் தெரிவு செய்யப்பட்ட கிளைகள் நாளை (04) வரை செயற்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பத்தரமுல்லையில் (Battaramulla) உள்ள ஆட்பதிவுத் திணைக்களத்தின் பிரதான அலுவலகமும், காலி, குருநாகல், வவுனியா மற்றும் மட்டக்களப்பு மாகாண அலுவலகங்களும் சனிக்கிழமை திறக்கப்படும் என திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சார்த்திகளுக்காக மாத்திரம்

க.பொ.த சாதாரண தர பரீட்சையில் தோற்றவுள்ள பரீட்சார்த்திகள் தமது தேசிய அடையாள அட்டைகளை (NIC) பெற்றுக் கொள்வதற்காக தெரிவு செய்யப்பட்ட அலுவலகங்கள் நாளை காலை 08.30 மணி முதல் பிற்பகல் 01.00 மணி வரை இயங்கும் என்று கூறப்பட்டுள்ளது.

க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள மாணவர்களுக்கான விசேட அறிவித்தல்! | Gce O Level Exam Announcement From Nic Department

க.பொ.த சாதாரண தர பரீட்சை பரீட்சார்த்திகளுக்காக மாத்திரமே நாளைய தினம் அலுவலகங்கள் இயங்கும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இதுவரை தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக்கொள்வதற்காக விண்ணப்பங்களை சமர்ப்பிக்காத விண்ணப்பதாரர்கள், அதிபர் அல்லது கிராம உத்தியோகத்தரால் சான்றளிக்கப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை எடுத்துச் செல்லுமாறு திணைக்களத்தினால் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.  

No comments