புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி!!
புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி
மண்முனைப்பற்று புதுக்குடியிருப்பு அகரம் பாலர் பாடசாலையின் விளையாட்டு போட்டி அகரம் பாலர் பாடசாலையின் தலைவர் அகரம் செ.துஜியந்தன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் முதன்மை அதிதியாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் மற்றும் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளருமான வைத்திய கலாநிதி டாக்டர் இரா.முரளீஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இங்கு முன்பள்ளி மாணவர்களின் உடல் உள ஆரோக்கியத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் உடற்பயிற்சி கண்காட்சி ஆகியன இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.
No comments