யாழ்.சர்வதேச விமான நிலையம் தொடர்பில் வெளியாகியுள்ள முக்கிய தகவல்
யாழ்.சர்வதேச விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்காக முதலீட்டாளர்களிடமிருந்து முன்மொழிவுகள் கோரப்பட்டிருந்ததாக அமைச்சின் செயலாளர் கே.டி.எஸ்.ருவன்சந்திர(K.D.S. Ruvanchandra) தெரிவித்துள்ளார்.
அத்தோடு இதன்போது ஒரேயொரு முன்மொழிவு மாத்திரமே கிடைக்கப்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன் காரணமாக யாழ்.சர்வதேச விமான நிலையத்தை(Jaffna International Airport) இந்தியாவுடன்(India) இணைந்து அபிவிருத்தி செய்ய தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
விமான சேவை நிறுவனம்
அதற்கமைய விரைவில் இதற்கான யோசனை தயாரிக்கப்படவுள்ள நிலையில் எதிர்வரும் ஜூலை மாதம் முதல் யாழ்.சர்வதேச விமான நிலையத்திலிருந்து எயார் இன்டிகோ விமான சேவை(IndiGo Airlines) நிறுவனமும் விமானப் பயணங்களை முன்னெடுக்கவுள்ளது.
தற்போது எயார் எலையன்ஸ்(Alliance Air) விமான சேவை நிறுவனம் மாத்திரம் விமான சேவைகளை முன்னெடுத்து வருகின்றது.
மேலும் எயார் எலையன்ஸ் விமான சேவை நிறுவனத்தினால் கொழும்பு(Colombo) - சென்னை(Chennai) இடையே நாளாந்தம் ஒரு விமான சேவை முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments