Vettri

Breaking News

பரிஸ் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தப்போகும் ஈழத் தமிழன்




 ஒலிம்பிக் தீப்பந்தத்தின் நீண்ட அஞ்சலோட்ட சுற்றுப்பயணம் பிரான்ஸ் முழுவதும் இடம்பெறவுள்ள நிலையில் பரிஸ் பிராந்தியத்தில் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு ஈழத் தமிழர் ஒருவருக்கு கிடைத்துள்ளது.

பரிஸ் நகரில் கடந்த வருடம் சிறந்த பாண் தயாரிப்பில் முதலிடம் பெற்று பிரான்ஸ் அதிபரின் வசிப்பிடமாகிய எலிஸே மாளிகைக்குப் பாண் விநியோகம் செய்யும் பெருமையைப் பெற்றவரான தர்ஷன் செல்வராஜா(tharshan Selvaraja) என்பவரே ஒலிம்பிக் தீப்பந்தம் ஏந்துவதற்குத் தெரிவாகியிருக்கிறார்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா

பிரான்சின் பாரிசில் இடம்பெற்ற சிறந்த பாண் உற்பத்தியாளருக்கான போட்டியில் 2023ஆம் ஆண்டுக்கான விருதை வென்ற யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜா பரிஸ் ஒலிம்பிக் சுடரை(Olympic torch) ஏந்தவுள்ளார்.

பரிஸ் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தப்போகும் ஈழத் தமிழன் | Jaffna Tamil To Carry The Olympic Torch

பத்தாயிரம் பேரில் ஒருவர்

ஒலிம்பிக் தீபத்தை 10,000 பேர் கரங்களில் ஏந்தி ஓடவிருக்கும் நிலையில், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷன் செல்வராஜாவுக்கும் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தும் வாய்ப்பு கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

பரிஸ் ஒலிம்பிக் தீபத்தை ஏந்தப்போகும் ஈழத் தமிழன் | Jaffna Tamil To Carry The Olympic Torch

No comments