Vettri

Breaking News

மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சிறுவன்: தேடுதல் பணியில் காவல்துறையினர்




 பன்னிபிட்டிய ஆராவல பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய சிறுவன் ஒருவன் கடந்த 4 நாட்களாக காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொஸ்கஹஹேன, ஆராவல பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய கலன மிஹிரங்க என்ற சிறுவனே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

கடந்த ஒரு வருடத்திற்கு முன்னர் தனது தாய் அவசர சிகிச்சையின் காரணமாக உயிரிழந்ததையடுத்து கலன தனது தந்தை மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தார்.

காணாமல் போயுள்ள 15 வயது சிறுவன்

கலன உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டவர் என்பதோடு, கலனின் தந்தையும் சில காலமாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வருகின்றார்.

மர்மமான முறையில் காணாமல் போயுள்ள சிறுவன்: தேடுதல் பணியில் காவல்துறையினர் | 15Year Old Boy Mysteriously Disappears Investigate

இந்நிலையில், கடந்த 5ம் திகதி இரவு, தந்தையின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. அதனால் கலனவின் சகோதரி தனது தந்தையை வைத்தியசாலையில் சேர்க்க பக்கத்துவீட்டு பெண்ணுடன் சென்றிருந்த நிலையில் கலன மாத்திரம் வீட்டில் தனித்து இருந்துள்ளார்.

தந்தையை வைத்தியசாலையில் அனுமதித்த பின்னர் வீடு திரும்பிய போது கலன் வீட்டில் இல்லாததால் உறவினர்கள் மற்றும் அயலவர்கள் அவரை தேடிய போதும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை.

இது தொடர்பில் மஹரகம காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய காவல்துறையினர் சிறுவனை கண்டுபிடிக்க விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

No comments