டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்ட மாற்றம்..! இன்றைய நாணயமாற்று விகிதம்
இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (08) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.
அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 38 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 92 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
ஸ்ரேலிங் பவுண் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 366 ரூபாய் 22 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 380 ரூபாய் 90 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர்
யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 314 ரூபாய் 52 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 327 ரூபாய் 94 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 212 ரூபாய் 77 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 11 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 191 ரூபாய் 49 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 201 ரூபாய் 42 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 215 ரூபாய் 45 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 225 ரூபாய் 66 சதம் ஆகவும் பதிவாகியுள்ளது.
இலங்கையிலுள்ள வங்கிகளில்
அதேபோல் இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளும் டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகளை வெளியிட்டுள்ளன.
அதன்படி மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 293.46 ரூபாயிலிருந்து 292.97 ரூபாயாகவும் விற்பனைப் பெறுமதி 303.39 ரூபாயிலிருந்து 302.89 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளது.
கொமர்ஷல் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 292.73 ரூபாயிலிருந்து 292.31 ரூபாயாகவும் குறைவடைந்துள்ள வேளை விற்பனைப் பெறுமதி 302 ரூபாயிலிருந்து 303 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.
சம்பத் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதிகள் முறையே 295 ரூபாயிலிருந்து 293.50 ரூபாய் மற்றும் 304 ரூபாயிலிருந்து 302.50 ரூபாயாகவும் குறைவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments