Vettri

Breaking News

தோட்டத் தொழிலாளர்களின் இறுதிச்சம்பளம் இவ்வளவு தான்!!!




 தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்தில் தொழில் ஆணையாளரால் குறிப்பிடப்பட்டு, தொழில் அமைச்சரால் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் தொகையே இறுதி சம்பளமாக அமையும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவீத்தார்.

பாராளுமன்றத்தில் புதன்கிழமை (22)  எதிர்க்கட்சியினால் பொருளாதாரம், சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கொண்டுவரப்பட்ட சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை மீதான விவாதத்தின் போது தமிழ் முற்போக்குக் கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர் வேலுக்குமாரால் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே நிதி இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

வேலுக்குமார் எம்.பி கேள்வியெழுப்புகையில்,

தோட்டத் தொழிலாளர்களின் தினசரி சம்பளத்தை 1,700 ரூபாய் வரையில் அதிகரித்து மே முதலாம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டது. கடந்த 3 வருடங்களாக அவர்களின் சம்பளம் அதிகரிக்கப்படவில்லை. இந்நிலையில் முதலாளிமார் சம்மேளனம் அந்த வர்த்தமானிக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த விடயத்தில் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? என வினவினார்.

இதன்போது பதிலளித்த நிதி இராஜாங்க அமைச்சர் கூறுகையில்,

அரச தலைவரே தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்பட வேண்டும் என்று தீர்மானித்துள்ளார். அதன்படி 1,700 ரூபாய் சம்பளம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி தோட்டக் கம்பனிகள், தொழிற்சங்கங்கள் யோசனைகளை முன்வைக்க முடியும். அந்த யோசனைகளின் பின்னர் தொழில் ஆணையாளர் நாயகம், அது தொடர்பாக ஆராய்ந்து வழங்கும் யோசனைக்கமைய தொழில் அமைச்சரால் வர்த்தமானியில் அறிவிக்கப்படும் தொகையே சம்பளமாகும்.  

No comments