Vettri

Breaking News

வெலிமடையில் பஸ் சாரதிகளுக்குக் கஞ்சா விற்பனை: போதைப்பொருளுடன் ஒருவர் கைது!




 


பஸ் சாரதிகளுக்குக் கஞ்சா போதைப்பொருள் விற்பனை செய்வதாகச் சந்தேகிக்கப்படும் நபரொருவர் வெலிமடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெலிமடை நகரத்தில் உள்ள பஸ் சாரதியொருவர் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட நிலையில் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையில் சந்தேக நபரிடமிருந்து 13 கிராம் நிறையுடைய கஞ்சா போதைப்பொருள் மற்றும் 26 கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிமடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments