அபிவிருத்தி .உத்தியோகத்தர்களுக்கான சகல உரிமைகளும் தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் -கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் வலியுறுத்தல்!!
அரச சேவையிலுள்ள அபிவிருத்தி .உத்தியோகத்தர்களுக்கான சகல உரிமைகளும் தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் -கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மே தினக்கூட்டத்தில் வலியுறுத்தல்
செ.துஜியந்தன்
அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சம்பள அதிகரிப்பு, பதவியுயர்வு கடமைப்பகிர்வு என்பன தொடர்பாக ஆராய்ந்து எமது சேவைப்பிரமாணத்தில் திருத்தங்களை மேற்கொண்டு அபிவிருத்தி .உத்தியோகத்தர்களின் அனைத்து பிரச்சினைகளும் எதிர்வரும் தேர்தலுக்கு முன்னர் வழங்கப்பட வேண்டும் .
என கிழக்கு மாகாண அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கத்தின் மே தினக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சங்கத்தின் தலைவர் க.துஸ்யந்தன், பொதுச் செயலாளர் சீ.லகவகுமார் ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது
தற்போதைய பொருளாதார நெருக்கடியில் மிகவும் பாதிக்கப்பட்ட உத்தியோககத்தர்களாக அபிவிருத்தி .உத்தியோகத்தர்களே இருக்கின்றனர். அவர்களது சம்பளம் எனைய சம தகைமையுடைய அரச உத்தியோகத்தர்களின் சம்பளத்துடன் ஒப்பிடும் போது சுமார் 30 – 42 வீதம் குறைவாக உள்ளது. இதே போன்று பதவித் தரங்களும் கீழ் மட்டத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது. எனவே இவற்றை நிவர்த்திப்பதற்காக பின்வரும் தீர்மானங்களை அனைத்து உத்தியோகத்தர்களாலும் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது..
1. அபிவிருத்தி .உத்தியோகத்தர்களின் சம்பளத்திட்டமானது MN- 4 இருந்து இருந்து MN -6 ற்கு மாற்றம் செய்தல்.;
2. 14.02.2012.ல் வெளியிடப்பட்ட 1745/11 ம் இலக்க அதிவிசேட வர்த்தமானி மூலம் அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணத்தில் குறிப்பிடப்பட்டுள்ள .3,2,1, என மூன்று தரங்களுடன் . விசேடதரம் உருவாக்குதல் அத்துடன் ஒவ்வொரு பதவியுயர்வற்குமான சேவைக்காலத்தினை 10 வருடத்திலிருந்து 6 வருடங்களாகக் குறைத்தல் மற்றும் பட்டமேல் டிப்ளோமா,முதுமாணி, ஆகிய பட்டங்களைப் பெற்றவர்களுக்கான வரப்பிரசாதங்கள் கிடைக்கக் கூடியவாறக சேவைப் பிரமாணத்தில் மாற்றம செய்தல்.
3. அத்துடன் இவற்றை நிவர்த்திக்கும் வகையில் ஜனாதிபதி, கிழக்கு மாகாண ஆளுனர் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
4. அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்குமான வினைத்திறன்காண் தடைப்பரீட்சையினை பரீட்சைத் திணைக்களத்தனூக நடாத்துதல்
5. பாடசாலைகளில் நியமிக்கப்பட்டுள்ள அபிவிருத்தி .உத்தியோகத்தர்களின் சேவை பற்றிய தெளிவினைப் பெறும் பொருடடு; உரிய அமைச்ர் மற்றும் செயலாளருக்கான கோரிக்கை சமர்ப்பித்தல்
6. 2005 இல் நிகழ்ச்சித் திட்ட உதவியாளர்களாக. நியமிக்கப்பட்டபட்டு அபிவிருத்தி உத்தியோகத்தாகளாக உள்ளீர்ப்புச் செய்யப்பட்டவர்களின் பதவியுயர்வில் உள்ள குறைபாடுகளை தீர்ப்பது பற்றிய கோரிக்கiயினை கௌரவ ஆளுனருக்கு சமர்ப்பித்து தீர்வினைக் கோரல்
7. அபிவிருத்தி .உத்தியோகத்தர்களின் சேவைப் பிரமாணத் திருத்தின் அவசியம் பற்றிய கோரிக்கையினை ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பித்தல்
களுவாஞ்சிக்குடி எருவில் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு சங்கத்தின் அமைப்பாளர். வி.கண்ணன், பொருளாளர். திருமதி ஜெ.நிமலநாதன் தலைவர்; கே..துசியந்தன் , செயலாளர் சீ.லவகுமார் ஆகியோருடன் அதிகளவான அபிவிருத்தி .உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்
No comments