மண்மேடு சரிந்து விழுந்ததில் ஒருவர் பரிதாப மரணம்!
கேகாலை (Kegalle) - வரக்காபொல காவல்துறை பிரிவிற்குற்பட்ட பகுதியில் மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (01) இடம்பெற்றுள்ளதாக வரக்காபொல காவல்துறையினர் தெரிவித்தனர்.
எலிபன்கமுவ, தொலங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 48 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
காவல்துறையினர் விசாரணை
இவர் வீடு ஒன்றை நிர்மாணிப்பதற்காக அத்திவாரம் வெட்டிக்கொண்டிருந்த போது திடீரென மண் மேடு சரிந்து வீழ்ந்ததில் பலத்த காயமடைந்துள்ளார்.
இந்த நிலையில் காயமடைந்தவர் வரக்காபொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் வரக்காபொல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில் காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments