இறுதி யுத்தத்தில் தன்னுயிர் ஈந்த சொந்தங்களுக்கு பிதிர்கடன் நிறைவேற்றிய உறவுகள்
யுத்தத்தின் போது முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த மக்களின் ஆத்ம சாந்தி பிரார்த்தனையும் பிதிர்கடன்களை நிறைவேற்றும் நடவடிக்கையும் இன்றைய தினம் இடம்பெற்றிருந்தது.
2009ஆம் ஆண்டு இடம்பெற்ற விடுதலை போராட்டத்தின் இறுதி தருணத்தில் முள்ளிவாய்க்காலில் உயிரிழந்த உறவுகளுக்கான பிதிர்க்கடன் செய்யும் வழிபாடும், ஆத்ம சாந்திக்கான பிரார்த்தனையும் இன்றையதினம் காலை 7.30 மணி முதல் முள்ளிவாய்க்கால் கப்பல் வீதியிலே உள்ள கடற்கரை பகுதியில் விசேடமாக ஒழுங்கமைக்கப்பட்டுள்ள இடத்திலே நேர்த்தியான முறையில் ஆரம்பமாகி இடம்பெற்றிருந்தது.
குறித்த பிதிர்கடன் வழிபாட்டில் கட்சி பேதமின்றியும், சாதி, மத பேதமில்லாமல் உறவுகளை இழந்த பெரும்திரளான மக்கள் வருகைதந்து இறந்தவர்களின் பெயர் கூறி பிதிர் கடனை நிறைவேற்றியிருந்தார்கள்.
இதனை தொடர்ந்து தமிழின படுகொலையின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற இருப்பதும் குறிப்பிடதக்கது.
No comments