Vettri

Breaking News

தென்னிலங்கையில் மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெண்




தென்னிலங்கையில் பெண் ஒருவர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெலிகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட , ராஜகல பிரதேசத்தை சேர்ந்த 78 வயதான பெண்னே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

நேற்றிரவு வீட்டுக்குள் புகுந்த நபர்கள், பெண்ணை கொலை செய்ததுடன், பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.குறித்த பெண்ணின் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தென்னிலங்கையில் மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெண் | Women Killed In Matara Today

உயிரிழந்த பெண் தனது சகோதரி மற்றும் அவரது கணவருடன் வசித்து வந்துள்ளார்.

குறித்த இருவரும் இரவில் சிகிச்சைக்காக வெலிகம நகருக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பிரேத பரிசோதனை

உயிரிழந்த பெண்ணின் சடலம் பிரேத பரிசோதனைக்காக மாத்தறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

தென்னிலங்கையில் மர்மான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெண் | Women Killed In Matara Today

மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸ் நிலைய அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments