இந்திய வெங்காய இறக்குமதியால் சீன வெங்காய விற்பனையில் வீழ்ச்சி
இலங்கைக்கு(Sri Lanka) இந்தியாவில் (India) இருந்து அதிகளவில் வெங்காயம் இறக்குமதி செய்யப்படுவதால், சீன (China) வெங்காயத்தின் தேவை குறைந்துள்ள நிலையில், அவற்றைக் கையிருப்பில் இருந்து நீக்க வேண்டியுள்ளதாக வர்த்தகர்கள் தெரித்துள்ளனர்.
கடந்த நாட்களில் ஒரு கிலோ சீன வெங்காயம் 300 ரூபாய்க்கு விற்கப்பட்டதாக வர்த்தகர்கள் குறிப்பிட்டனர்.
இதேவேளை தற்போது ஒரு கிலோ சீன வெங்காயம் 100 ரூபாய்க்கு கூட விற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினர்.
நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி
அத்துடன் நெதர்லாந்தில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இரண்டு கிலோ பெரிய வெங்காயம் 100 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு கிலோ இந்திய வெங்காயத்தின் விலை 150 முதல் 250 ரூபாய் வரை குறைந்துள்ளது எனவும் வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
இதேவேளை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு பெரிய வெங்காயத்தை இறக்குமதி செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
No comments