கட்டுநாயக்க விமான நிலையத்தில் பரபரப்பு: விசா வழங்கும் செயல்முறையில் ஏற்பட்டுள்ள குழப்பம்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் விசா வழங்கும் செயல்முறைகளில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக பதற்றமான சூழ்நிலையொன்று ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது, நேற்று(01) இரவு இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்போது, விமான நிலையத்தில் (BIA) ஆன்-அரைவல் விசா வழங்கும் செயல்முறையை இந்திய நிறுவனம் ஒன்று சர்ச்சைக்குரிய வகையில் கையகப்படுத்தியுள்ளதாக நபர் ஒருவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
கடுமையான எதிர்ப்பு
இந்நிலையில், குடிவரவு திணைக்கள அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு விசா வழங்கும் நடைமுறை நேற்று முதல் இந்திய தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இலங்கையை சேர்ந்த நபர் ஒருவர் தனது மனைவியின் ஆன்-அரைவல் விசா ரத்து செய்யப்பட்டதாகக் கூறி, இந்திய விசா வழங்கும் அதிகாரிகளுக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
அத்தோடு குறித்த நபர், விசா வழங்கும் முறையைக் கையாளக்கூடிய பல இலங்கை நிறுவனங்கள் இருக்கும் போது, இலங்கை அரசாங்கம் ஏன் இந்திய நிறுவனத்திற்கு விசா வழங்கும் முறையை வழங்க வேண்டும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.
அதேவேளை, விசா வழங்கும் செயல்முறையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக வெளிநாட்டு பயணிகளும் பல மணி நேரங்களுக்கு காத்திருக்க வேண்டி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
No comments