சீனாவில் கத்திக்குத்து தாக்குதல்! இருவர் உயிரிழப்பு - பலர் காயம்
தென்மேற்கு சீனாவில் (china) உள்ள மருத்துவமனையில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதலில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், 21 பேர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த கத்திக்குத்து தாக்குதல் இன்று(07) யுனான் மாகாணத்தில் (yunnan province) உள்ள ஜென்சியோங்(Zhenxiong) மக்கள் மருத்துவமனையில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கத்திக்குத்து தாக்குதல்
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், மருத்துவமனையில் நுழைந்த ஒரு மர்ம நபர் ஒருவர் கண்ணில் பட்டவர்களையெல்லாம் கத்தியால் குத்தி தாக்குதல் நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலதிக விசாரணைகளை அந்நாட்டு அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
No comments