Vettri

Breaking News

நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது- எம்.எஸ் தௌபீக் எம்.பி




 நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது- எம்.எஸ் தௌபீக் எம்.பி



நாட்டின் முன்னேற்றத்திற்கும் வளர்ச்சிக்கும் தொழிலாளர்களின் பங்களிப்பு மகத்தானது எனவும் இந்நாளில் எனது இதயங்கனிந்த மே தின நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ் தௌபீக் அவரது மே தின வாழ்த்து அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


மேலும் அவர் தெரிவிக்கையில்,


உடலினை இயந்திரமாக்கி, உழைப்பினை உரமாக்கி, உலகத்தை இயங்க வைப்பவர்களே தொழிலாளப் பெருமக்கள். அவர்கள் வருடத்தில் ஒருநாள் மட்டுமே நினைத்துப் போற்றப்பட வேண்டியவர்கள் அல்ல. வருடம் முழுவதும் நினைத்துப் பாராட்டப்பட வேண்டியவர்கள்.


எமது நாட்டில் பொருளாதார நெருக்கடிக்கு பிற்பாடு தொழிலாளர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்கவேண்டிய நிலையை எதிர்நோக்கியிருக்கின்றனர். நாம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தாலும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக தொடர்ந்துப் போராடியிருக்கிறோம். 

 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸானது தொழிலாளர் நலனுக்காக எப்போதும் குரல்கொடுக்கும் என்பதோடு,  தொழிலாளர் வாழ்வில் முன்னேற்றமும், நிம்மதியும் காண அயராது பாடுபடும் இயக்கம் என்பதை உழைப்பாளர் சமுதாயம் நன்கு அறியும்.


உழைப்பாளர்களது எதிர்பார்ப்புக்கள் நிறைவேறவும், அவர்களது குடும்பங்களில் மகிழ்ச்சி, வெற்றி பெருகவும் பிரார்த்திப்பதாக அவரது வாழ்த்து அறிக்கையில் தெரிவித்தார்.

No comments