Vettri

Breaking News

இன்றைய வானிலை!!




 தென்மேற்கு பருவக்காற்று நிலைமைகள் காரணமாக, நாட்டில் தற்போதைய மழை மற்றும் காற்றின் நிலை தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இன்றையதினம் (29) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் தென் மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா மாவட்டத்திலும் சில இடங்களில் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிகமான மிகப் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணம் மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு மாவட்டங்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய, மேல், தென், வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, மொணராகலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 50-60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

No comments