Vettri

Breaking News

அனுமதி பத்திரமின்றி மீன்பிடியில் ஈடுபட்ட இருவர் படகுடன் கைது!




 


சுண்டிக்குளம் - சாலை கடற்பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி மீன்பிடித்த இருவர் படகுடன் நேற்று வியாழக்கிழமை (02) கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கடற்படை முகாமிற்கு அருகில் நீண்ட நேரமாக சந்தேகத்துக்கிடமான முறையில் தரித்து நின்ற படகை சுண்டிக்குளம் கடற்படையினர் திடீர் சோதனை செய்தனர் 

இந்த சோதனையில் குறித்த படகு அனுமதி பத்திரம் இன்றி மீன்பிடியில் ஈடுபட்டமை தெரிய வந்தது.கைது செய்யப்பட்ட இருவரும் சுண்டிக்குளம் கடற்படை முகாமுக்கு  அழைத்துவரப்பட்டு விசாரணையின் பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக யாழ்ப்பாணம் கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

No comments