வீதியில் வீழ்ந்திருந்த மரமொன்றில் மோதி விபத்து!!!
ஹங்வெல்ல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாதுக்க - வக வீதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று (23) வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்றுள்ளது.
தும்மோதர பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
வகயிலிருந்து பாதுக்க நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் வீழ்ந்திருந்த மரமொன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் காயமடைந்தவர் பாதுக்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரது சடலம் பாதுக்க வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹங்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments