வவுனியா மாவட்ட சம்மேளன தலைவராக கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு!!
இளைஞர் மற்றும் விளையாட்டு அமைச்சின் கீழ் இயங்கும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய தலைவராகவும் தெற்காசியாவின் மிகப்பெரிய இளைஞர் கழக சம்மேளனமான இலங்கை இளைஞர் கழக சம்மேளனத்தின் வவுனியா மாவட்ட தேசிய பிரதிநிதியாகவும் கணேசலிங்கம் சிம்சுபன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
வவுனியா மாவட்ட இளைஞர் கழக சம்மேளனத்தின் புதிய நிர்வாக தெரிவு நேற்று (19.05.2024) முன்னாள் மாவட்ட சம்மேளனத் தலைவர் விந்துஜன் தலைமையில் வவுனியா தேசிய இளைஞர் சேவைகள் மன்ற மண்டபத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வவுனியா மாவட்ட உதவிப்பணிப்பாளர் ரவீந்திர,
மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி I.சுகானி இளைஞர் வவுனியா இளைஞர் சேவை அதிகாரி ஜஸ்மின், வவுனியா வடக்கு இளைஞர் சேவை அதிகாரி இல்ஹாம் மற்றும் வவுனியா தெற்கு இளைஞர் சேவை அதிகாரி ஜயலத் ஆகியோர் கலந்து சிறப்பித்திருந்தனர்.
No comments