Vettri

Breaking News

ஜனாதிபதியின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டிய காணாமல ஆக்கப்பட்டோரின் உறவுகள்: குவிக்கப்பட்ட பொலிசார்!!




 ஜனாதிபதியின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கறுப்புக் கொடி காட்டிய காணாமல ஆக்கப்பட்டோரின் உறவுகள்: குவிக்கப்பட்ட பொலிசார்



ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் வவுனியா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கறுப்புக் கொடி காட்டப்பட்டது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வவுனியா வைத்தியசாலை மற்றும் மாவட்ட செயலகம் என்பவற்றுக்கு இன்று (26.05) பிற்பகல் வருகை தந்த நிலையில் மாவட்ட செயலகம் முன்பாக ஒன்று கூடிய வவுனியா மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தை சேர்ந்த தாய்மார் சிலர் ஜனாதிபதியின் வருகைக்கு கறுப்பு கொடி காட்டி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது அங்கு மேலதிக பொலிசார் மற்றும் அதிரடிப்படையினர் குவிக்கப்பட்டு குறித்த தாய்மாரை வீதிக்கு இறக்க விடாது தடுக்கப்பட்டிருந்தனர். சிறிது நேரத்தின் பின் மாவட்ட செயலக வாயிலுக்கு செல்ல முற்பட்ட தாய்மாரை பொலிசார் வழிமறித்து அங்கிருந்து அவர்களை வெளியேற்றி இருந்தனர்.  இதன்காரணமாக, மாவட்ட செயலகம் முன்பாக ஜனாதிபதியின் கூட்டம் முடியும் வரை பரப்பான நிலமை காணப்பட்டது. 

No comments