மட்டக்களப்பில் நடந்த அதிர்ச்சி சம்பவம்! பெற்றோர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மட்டக்களப்பில் (Batticaloa) உள்ள பாடசாலை மாணவர்கள் தொடர்பில் அவர்களது பெற்றோர்களுக்கு தாயார் ஒருவர் எச்சரிக்கைப் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மட்டக்களப்பு - கோட்டை முனை (Kottai Munai) பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவிக்கு அண்மையில் மர்ம ஊசி ஒன்று ஏற்றப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக குறித்த மாணவி தற்போது உடல் நிலை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும் அந்த தாயார் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தரம் ஐந்தில் கல்வி பயிலும் குறித்த மாணவி பாடசாலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்த போது சைக்கிளில் வந்த ஒரு இளைஞன், அந்த மாணவியிடம் உங்களுக்கு ஊசி ஏற்றப்பட்டதா என விசாரித்து விட்டு, இல்லையென்றதும், உங்களுக்கு மாத்திரம் தான் ஊசி ஏற்றப்படவில்லை எனக் கூறி ஒரு ஊசியை ஏற்றி விட்டுச் சென்றுள்ளார்.
இதன் காரணமாக குறித்த மாணவிக்கு கடும் சுகயீனம் ஏற்பட்டதாக அந்தத் தாயார் தன்னுடைய பதிவில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments