Vettri

Breaking News

தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை : புலனாய்வுப்பிரிவினர் விசாரணை




 கம்பஹா - யக்கல பிரதேசத்தில் தனியார் பயிற்சி வகுப்பில் கலந்து கொள்வதற்காக சென்ற 14 வயதுடைய மூன்று மாணவிகள் நேற்று (29) மாலை முதல் காணாமல்போயுள்ளதாக யக்கல மற்றும் வீரகுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

யக்கல பொலிஸாருக்கு இது தொடர்பில் முறைப்பாடு கிடைத்துள்ளதுடன் மற்றைய இரண்டு முறைப்பாடுகள் வீரகுல பொலிஸாரிடம் கிடைக்கப்பெற்றுள்ளன.

காணாமல்போயுள்ளதாக கூறப்படும் மாணவிகளின் தாய்மார்களே இந்த முறைப்பாடுகளை செய்துள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை : புலனாய்வுப்பிரிவினர் விசாரணை | School Student Missing Police Investigation


காணாமல் போன மூன்று மாணவிகளும் கம்பஹா யக்கல பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9ஆம் ஆண்டில் கல்வி கற்கும் நண்பர்கள் எனவும், இவர்கள் மூவரும் நேற்று (29) இரவு வரை வீட்டுக்கு வரவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் வகுப்பிற்கு சென்ற மூன்று மாணவிகளை காணவில்லை : புலனாய்வுப்பிரிவினர் விசாரணை | School Student Missing Police Investigation

காணாமல்போன மூன்று மாணவிகள் தொடர்பில் நேற்று (30) வரை எவ்வித தகவலும் தமக்கு கிடைக்கவில்லை என யக்கல மற்றும் வீரகுல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் அதிகாரிகள் மற்றும் யக்கல மற்றும் வீரகுல பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments